முகப்பு விலைப்பட்டியல் கருத்துகளை பதிவு செய்ய தொடர்புக்கு

புதிய நூல்கள்

மணிமேகலை விலைப்பட்டியல்
எழுத்தாளர், பதிப்பாளர் முதலீட்டுத் திட்டம்
புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள்

தகவலுக்கு

Name Email Phone Subject Comments

ரவி தமிழ்வாணன்

வாழ்க்கைக் குறிப்பு

பிறந்த இடம், தேதி : சென்னை, தமிழ்நாடு, 11.11.1955
பெற்றோர் : திரு.தமிழ்வாணன்-திருமதி.மணிமேகலை
மணவாழ்க்கை : மனைவி: திருமதி.வள்ளி, பி.காம், படித்தவர்.
இரண்டு மகன்கள்: மூத்தவன்:இராமநாதன். புல் மருத்துவர்மலேஷியாவில் பணி. மருமகள்: திருமதி.சிந்தாமணி இளையவன் ரஞ்சித்:காக்னிஸன்ட்,கணினி நிறுவனத்தில் பணி
கல்வி : பி.காம். ஏ.சி.ஏ.
பதவி : நிர்வாக இயக்குநர்,மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
முகவரி : தியாகராய நகர், சென்னை 600 017. தொலைபேசி: 24342926, 24346082 மின்அஞ்சல்:manimekalai1@dataone.in manimekalaii2020@yahoo.com
இணையதளம் : www.tamilvanan.com

1977-லிருந்து இவர் நிர்வாக இயக்குநராகத் திகழும் மணிமேகலைப் பிரசுரத்தில் நாள் ஒன்றிற்கு ஒன்றரை புத்தகங்கள் வீதம் வருடத்திற்குச் சுமார் 500 நூல்கள் வெளியாகின்றன. தற்போது பல்வேறு துறைகளில் 3300 தலைப்பு நூல்கள் விற்பனையில் உள்ளன. தமிழகப் பதிப்பக உலகிலேயே அதிகத் தலைப்புகள் விற்பனையாவது மணிமேகலைப் பிரசுரத்தில்தான்! இதுவரை 61 புத்தகங்கள், தமிழக அரசு, பாரத ஸ்டேட் வங்கி, திருப்பூர் தமிழ்ச்சங்கம், அனந்தாச்சாரி அறக்கட்டளை போன்ற பல்வேறு அமைப்புகளின் பரிசுகளைப் பெற்றுள்ளன.

கனடாவில் வாழும் திரு.அ.முத்துலிங்கம் எழுதி இவர் வெளியிட்டுள்ள 'வடக்கு வீதி' புத்தகம், 1999 இல் இலங்கை அரசின் பெருமைமிகு 'சாகித்ய அகாதமி' விருது பெற்றது. ஒரு தமிழ்ப் பதிப்பகம் இப்படியொரு விருதைப் பெறுவது இதுவே முதல் முறை.

தமிழ்நாடு பதிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளராக 1984லிருந்து 1988 வரை பதவி வகித்தவர். 1987-இல் தமிழகத்தின் சிறந்த பதிப்பாளர் என இவரைத் தேர்ந்தெடுத்து, வி.ஜி.பி. கல்ச்சுரல் அகாதமி இவருக்கு விருது வழங்கியது. 1999-இல் குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்களை வெளியிட்டதற்கான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா இலக்கியவட்ட அறக்கட்டளையின் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு தான் படித்த சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்களுக்காக 7 இலட்ச ரூபாய் செலவில் இலவச குளிரூட்டப்பட்ட குடிநீர் திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்.

15-4-2000 அன்று இலண்டனில் நடந்த மாபெரும் நிகழ்ச்சி ஒன்றில் 15 ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து For Invaluable Services Rendered To Expatriate Tamil Literature என்ற காரணத்திற்காக Publishers Sans Frontiers என்ற பட்டத்தை இவருக்கு அளித்தார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக, எழுத்தாளர்-பதிப்பாளர் முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிறார்.

மணிமேகலைப் பிரசுர வெளியீடுகளில் பிரபலமானவர்களின் விலாசங்கள் புத்தகம் வித்தியாசமானது. இதுவரை 28 பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. 1926-லிருந்து 2020 வரை 95 வருடங்களுக்கு பஞ்சாங்கத் தொகுப்பு நூல்கள் வேறு எந்த பதிப்பாளர்களும் முயற்சி செய்யாத விஷயம். கம்ப்யூட்டர் பற்றிய நிறைய நூல்கள், வீட்டுப் பிளான்கள், பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ளுதல், தொழில் நுட்பம், 60 வகையான சட்ட நூல்கள், தமிழக மாவட்டங்கள், இந்திய மாநிலங்கள், உலக நாடுகள் பற்றிய நூல்கள் - ஆகியவை மணிமேகலைப் பிரசுரத்தின் பிரத்யேகச் சிறப்பு.

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் ஈழ எழுத்தாளர்களின் 450 நூல்களை இவர் வெளியிட்டிருப்பது ஈழ இலக்கியத்திற்கு செய்யப்பட்டிருக்கும் சிறந்த சேவையாகும். வெளிநாடுகளில் அதிக அளவு சுற்றுப்பயணம் செய்தவர். 42 முறை இலங்கைக்கும், 14 முறை மலேஷியாவிற்கும், 15 முறை அமெரிக்கா, ஏழு முறை இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், நான்கு முறை பிரான்சிற்கும், சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, துபை ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்த நாடுகளிலெல்லாம் வாழ்கிறார்களோ, அந்த நாடுகளுக்கெல்லாம் இவர் சென்று வந்திருக்கிறார். மணிமேகலைப் பிரசுரக் கண்காட்சி நடத்துவதற்காக குவைத், கனடா, நெதர்லாந்து, நார்வே, சுவீடன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று வெற்றிகரமாகப் புத்தக விற்பனையைச் செய்து திரும்பியிருக்கிறார். ஹாங்காங், பாங்காக், புரூனே. மாலத்தீவுகள், மொரிஷியஸ், சிஷெல்ஸ், ஜப்பான், சீனா. . . என இவர் பயணப் பட்டியல் நீள்கிறது.

15.2.2001 அன்று குவைத்தில் நடந்த அரட்டை அரங்கத்தை இவர் மிகச் சிறப்பாக நடத்தினார் என்று 1800 பேர் கூடியிருந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அரட்டை அரங்கப் புகழ் திரு.விசு பெரிதும் பாராட்டினார். எழுத்தாளர் திரு.என்.சி.மோகன்தாஸ் ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து குஜராத் பூகம்ப நிதிக்காக ரூ.5.5 லட்சமும், இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் திரு.படுதலம் சுகுமாரனுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.

2003 ஜனவரி 15ஆம் தேதியன்று 2002 ஆம் ஆண்டின் சிறந்த பதிப்பாளர் எனத் தேர்ந்தெடுத்து சேலம் தமிழ்ச் சங்கம் கௌரவித்தது. இச் சங்கத்தின் புரவலர் முன்னாள் அமைச்சர் திரு.க.ராசாராம் விருதும் நற்சான்றிதழும் வழங்கினார். 2003 அக்டோபர் 10 ஆம் தேதி தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் முஸ்லிம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முனைவர் திரு.ரஃபியுதீன்| முனைவர் திரு.அய்யூப் ஆகிய இருவரும் இவருக்கு புத்தக வேந்தன் என்ற பட்டத்தை வழங்கினார்கள்.

4.4.04 அன்று உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் கிளையின் சார்பில் 'பதிப்பக செல்வர்' என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. இவர் ஏராளமான ஜோதிட நூல்களை வெளியிட்டிருப்பதால் யுனிவர்சல் அஸ்ட்ராலஜி ரிசர்ச் அகடெமி பதிப்பக மாமணி எனும் விருதை 4.7.04 அன்று வழங்கியது.

1994லிருந்து டிசம்பர் 2001 வரை 7 வருடங்கள் ஹாட்ஸன் ஆக்ரோ புராடக்ட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா ஆந்திரா, கர்நாடகா எனத் தென் மாநிலங்களிலும், வட இந்தியாவிலும் முதன்மை பெற்று விளங்கும் அருண் ஐஸ்கிரீமை தயாரிப்பது இந்நிறுவனம்தான். விற்பனையில் சாதனை படைக்கும் ஆரோக்கியா பால். கோமாதா பால் ஆகியவையும் இந் நிறுவனத்தின் தயாரிப்பே.

சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழகம், ஜெயா தொலைக்காட்சியின் காலை மலர், அரிகிரி அசெம்ப்ளி, பொதிகையில் காலைத் தென்றல், விஜய் தொலைக்காட்சியில் கிச்சன் கில்லாடிகள், நம்ம வீட்டுக் கல்யாணம், தமிழன் தொலைக்காட்சியில் விளையாட்டுச் சுடர், பாலிமர், வின், ஜிடிவி, ஏஎம்.என் ஆகிய தொலைக் காட்சிகளிலும், மின் வலைய தளங்கள், மின்னம்பலம், இணையதளம், சென்னை வானொலியின் பண்பலை வரிசை ஆகிய நிகழ்ச்சிகளில் நிறைய பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.

இவர் ஒரு தொலைக்காட்சித் தொடர்த் தயாரிப்பாளரும் கூட. தன் தந்தை திரு.தமிழ்வாணன், சகோதரர் திரு.லேனா தமிழ்வாணன் ஆகியோரின் நாவல்களை சின்னத் திரைக்காக தொடர்களாகத் தயாரித்திருக்கிறார். சங்கர்லால் துப்பறிகிறார், மணிமொழி நீ என்னை மறந்துவிடு, கிழக்கே உதித்த காதல், கம்ப்யூட்டர் கொலை, ஆகியவை சின்னத் திரையில் வந்தவை. இவருடைய ஹாட்ஸன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் டெலி பிலிம் தயாரித்துள்ளது. குமுதம் வார இதழ் நிறுவன ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பியின் காதலெனும் தீவினிலே என்ற 52 வாரத் தொடர் மார்ச் 2001லிருந்து சென்னைத் தொலைக்காட்சி அலைவரிசை 1 ல் ஒளிபரப்பாகியது.

ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகம் 18.12.05 அன்று, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்திய விழாவில் பதிப்பகப் புரவலர் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.

சேலம் கே.ஆர்.ஜி.நாகப்பன் ராஜம்மாள் அறக்கட்டளை சார்பாக 3.9.06 அன்று சேலத்தில் நடந்த விழாவில் பதிப்புச் சுடர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இலண்டன் சர்வதேச அகதிகள் சம்மேளன் சார்பாக 2.10.06 அன்று சென்னையில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் சிறந்த பதிப்பாளர் மற்றும் 'ஐரோப்பிய ரத்னா' என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

துணைவேந்தர்கள் முனைவர் இராமச்சந்திரன், முனைவர் விஸ்வநாதன்இ முனைவர் முஸ்தபா உசேன் மற்றும் திரு.பா.கல்யாணசுந்தரம் ஆகிய நால்வர் குழுவால் அன்பு பாலம் சமூக சேவை நிறுவனம் சார்பில் ரவி தமிழ்வாணனுக்கு சாதனையாளர் விருதுடன், ஒரு பதக்க்கம் பதிப்பகச் சேவைக்காக 28.1.08 அன்று சென்னையில் நடந்த சுதந்திர தின வைர விழாவில் வழங்கப்பட்டது.

2009இல் சென்னை காந்தி மண்டபத்தில் அன்புப் பாலம் அமைப்பால் சிறந்த தம்பதியினர் என இவரையும், இவர் மனைவியையும் தேர்ந்தெடுக்கப்பட்டு நீதியரசர் திரு.ஜோதிமணி தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பித்தார்.

9.10.2009 அன்று சென்னை ஸ்டர்லிங் டென்னிஸ் கிளப்பில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் 54 பேர்களுள் இவர் இரண்டாவதாக வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

கனடாவின் பிரபல உதயன் வார இதழ் இரு சர்வதேச விருதுகளை 21.3.2010 அன்று வழங்குவதாக அறிவித்து தமிழகத்திற்கான விருதை ரவி தமிழ்வாணனுக்கும், இலங்கைக்கான விருதை ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீதுக்கும் வழங்கியது.

2010இல் சங்கமம் தொலைக்காட்சி நடமாடும் நூலகம் என்ற விருதையும், 2012இல் முத்தமிழ் வித்தகர் என்ற விருதையும், 2013 ஜனவரியில் டாக்டர் ஜே.ஜி.கண்ணப்பர்-வாசுகி அறக்கட்டளையின் சார்பில் பதிப்பக பகலவன் (ரவி-சூரியன்-பகலவன்) எனும் பொருத்தமான பட்டமும் வழங்கப்பட்டது.முகப்பு எங்களைப் பற்றி விலைப்பட்டியல் புதிய நூல்கள் நிகழ்ச்சிகள் கருத்துகளை பதிவு செய்ய தொடர்புக்கு

Copyright © www.manimekalaiprasuram.com     All Rights Reserved.

Web Design Chennai : Annaimar